இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் இன்று (6) முதல் தனது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

அதன்படி, மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் இன்று முதல் நிறுத்தப்படும் என சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.

இதற்கிடையில், அரசாங்கம் மீண்டும் மின்சார கட்டணத்தை உயர்த்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார பயனாளிகள் சங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அதன் தலைவர் எம்.டி.ஆர். அதுல இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.

அதேவேளை, “இந்நேரத்தில் மின்சார கட்டண உயர்வு தேவையில்லை” என மின்சார சபை புதிய ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரியந்த விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

மேலும், “மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டால் கட்டுமானத் துறைக்கு கடுமையான சிக்கல்கள் உருவாகும்” என தேசிய கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகர எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here