நெடுந்தீவு அருகே இலங்கை கடற்பரப்பில் இடம்பெற்ற விபத்தில் இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் குழுவொன்றை கைது செய்ய சென்ற போது, ​​அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இவ்விபத்தில் நான்கு மீனவர்கள் கடலில் விழுந்துள்ளதுடன் இருவர் மீட்கப்பட்டு புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மற்றைய மீனவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here