இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் பதவியிலிருந்து ஷம்மி சில்வா எதிர்வரும் புதன்கிழமை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் இதன்மூலம், அவரது ஏழு ஆண்டு காலப் பதவிக்காலம் முடிவுக்கு வரவுள்ளது எனவும் லங்காதீப நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத் தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து சில்வா பதவி விலக உள்ளார் என்று அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான எரான் விக்ரமரத்ன, இலங்கை கிரிக்கெட்டின் புதிய இடைக்காலத் தலைவராக நியமிக்கப்படுவார் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019 பெப்ரவரியில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷம்மி சில்வா, அன்று முதல் பல தேர்தல்களில் வெற்றி பெற்று அப்பதவியில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்ததோடு இலங்கை கிரிக்கட் அணி பல போட்டிகளில் பிரகாசிக்க தவறிய நிலையில் ஷம்மி சில்வாவை பதவி விலகுமாறு ஜனாதிபதியினால் கோரிக்கை விடுக்கப்பட்டதாக முன்னதாக செய்திகள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here