இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று (29) ஹராரேவில் நடைபெறவுள்ளது.

இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடர், இலங்கை நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு தொடங்கும்.

இந்தப் போட்டியில் இலங்கை அணிக்கு சரித் அசலங்கவும், சிம்பாப்வே அணிக்கு கிரெய்க் இர்வினும் தலைமை தாங்கவுள்ளனர்.

இரு அணிகளுக்குமிடையே இதுவரை நடைபெற்ற 64 ஒருநாள் போட்டிகளில், இலங்கை அணி 49 முறை வெற்றிபெற்றுள்ளதுடன், சிம்பாப்வே அணி 12 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here