அக்டோபர் மாதத்தின் முதல் 20 நாட்களில் மட்டும் 1 இலட்சத்துக்கும் மேற்பட்டவெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) சமீபத்திய தரவுகளின்படி, 2025 அக்டோபர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 103,491 வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

குறிப்பாக இந்தியாவில் இருந்தே     29ஆயிரத்து நானூற்று 60 பயணிகள் அதிகபடியாக (28.5%) வருகை தந்தனர்.

அதைத் தொடர்ந்து,

ஐக்கிய இராச்சியம் – 8,529

சீனா – 8,063

ஜெர்மனி – 6,305

ரஷ்யா – 5,469

என முன்னணி நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வருகைகளுடன் 2025ஆம் ஆண்டிற்கான மொத்த வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை 1,828,985 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வருடம் இதுவரை அதிகமான சுற்றுலாப் பயணிகளை வழங்கிய முதல் ஐந்து நாடுகள்:

இந்தியா – 404,752

யுனைடெட் கிங்டம் – 170,422

ரஷ்யா – 127,613

ஜெர்மனி – 113,293

சீனா – 109,653

2025 செப்டம்பரில் மட்டும் 158,971

வெளிநாட்டினர் இலங்கைக்கு வந்துள்ளதாகவும், இது 2024 செப்டம்பருடன் ஒப்பிடும்போது 30.2% உயர்வைக் காட்டுவதாகவும் SLTDA தெரிவித்துள்ளது.

சுற்றுலாத் துறை நிலையான வளர்ச்சிப்பாதையில் முன்னேறி வருவதாகவும், வரும் மாதங்களில் மேலும் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இலங்கையின் சுற்றுலாத்துறையை பாதிக்கும் வகையில் இலங்கை வரும் அமெரிக்கர்களுக்கு நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களால் எதிர்பாராத முறையில் போராட்டங்கள் ஏற்படக்கூடும் என்றும், அவை திடீரென வன்முறையாக மாறும் வாய்ப்பு உள்ளதாகவும் இலங்கையில் ஏற்பட்டுவரும் அரசியல் ஸ்திரமின்மையையும் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக சுற்றுலா வல்லுணர்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here