இந்த வருடத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 வீதம் முதல் 5 வீதம் வரை வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் இன்று இடம்பெற்ற செய்திக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடனை மீளச் செலுத்தும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுமாயின் நாடு நெருக்கடிக்கு உள்ளாகும் என்ற கருத்து தவறானதாகும்.
இலங்கை தொடர்ந்தும் தற்போதைய பாதையிலேயே பயணிக்குமாயின் நெருக்கடியைத் தவிர்த்துக் கொள்ள முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.







