இலங்கைக்கு சொந்தமான பல நாள் மீன்பிடி படகு ஒன்றில் இருந்து மாலைதீவு கடலில் இருந்து இலங்கைக்கு கடத்திய 344 கிலோ கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள், 124 கிலோ கிராம் கொக்கைன் போதை பொருளுடன் திருகோணமலை மற்றும் தெய்வேந்திரமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 5 பேரை மாலைதீவு கடற்படையினர் சனிக்கிழமை (23.11.2024) கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் மாலைதீவு கடற்படையினருக்கு வழங்கிய தகவலுக்கமைய சம்பவதினமான சனிக்கிழமை (23.11.2024) மாலைதீவு கடலில் பயணித்த படகை கடற்படையினர் சுற்றிவளைத்து சோதனையிட்டபோது அதில் இருந்து 344 கிலோ கிராம் மெத்தம்பெட்டமைன் போதைபொருள், 124 கிலோ கிராம் கொக்கைன் போதைபொருளை கைப்பற்றியதுடன் 5 பேரை கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் தெய்வேந்திரமுனை திருகொணமலை பிரசேதங்களைச் சேர்ந்த 21 வயது தொடக்கம் 37 வயதுடையவர்கள் எனவும் அஷேன் புத்தா என்ற பல நாள் மீன்பிடி படகு இவ்வாறு போதை பொருள் கடத்திலில் ஈடுபட்டுவந்துள்ளதாக மாலைதீவு கடற்படையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குறித்த போதைப்பொருள் தொடர்பில் இரு நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளுக்கிடையே தகவல் பரிமாறப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.










