லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என அமெரிக்க பிரதி ஜனாதிபதி ஜே.டி.வேன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

லெபனான் மீதான குண்டு வீச்சு தாக்குதலில் சுமார் 300 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும் 1150 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் தொடர்ந்தும் இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தரப்பு மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தற்காலிகமாக தாக்குதல்கள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து யுத்த நிறுத்தம் தொடர்பாக பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை நடத்த உலக நாடுகளின் தலைவர்கள் இணங்கியுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க பிரதி ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சனிக்கிழமை அன்று கலந்துகொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழலில் அவர் இஸ்ரேலின் தாக்குதல் குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here