ஈரானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கமல் கராஸி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காயமடைந்த அவர் நேற்றைய தினம் (09) சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

81 வயதான கமல் கராசி வெளியுறவு அமைச்சின் சர்வதேச உறவுகளுக்கான மூலோபாய குழுவின் தலைவராக பணியாற்றி வந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெஹ்ரானின் குடியிருப்பு பகுதிகளின் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் முன்னாள் அமைச்சரான கமல் கராசியின் வீடும் தாக்கப்பட்டதாகவும் இதில் அவரது மனைவி உயிரிழந்த நிலையில் அவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here