இஸ்ரேலில் உள்ள வனப்பகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காட்டுத்தீயினால் குறைந்தது 13 பேர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழப்புகள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

தீப்பரவல் ஏற்பட்டுள்ள பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தீயணைப்பு வாகனங்கள், உலங்கு வானூர்திகள் என்பன தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

அந்தப் பகுதியில் உள்ள பல வீதிகளும் போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here