தம்புள்ளை – குருநாகல் வீதியின் பெலிகமுவ பகுதியில் இன்று (4/21/2025) காலை இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் தெஹியத்தகண்டிய பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 28 வயதுடைய கணவன் , மனைவி எனத் தெரியவந்துள்ளது.
பலத்த காயமடைந்த தம்பதியின் பிள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கலேவெலயிலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற உந்துருளி வீதியைக் கடந்த நாய் மீது மோதியதில் வீதியின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மூவரும் கலேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, சிகிச்சைப் பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளதுடன், சிறுவன் மேலதிகச் சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்தனர்.







