விவசாயிகளுக்கு உரம் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு நேரடியாக பதிலளித்த விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, உரங்களை சட்டவிரோதமாக பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அவர்களின் உர விநியோக உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

குருநாகலில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அரலகங்வில – கஜுவத்த பகுதிகளில் விவசாயிகள் நெல் விதைத்து 45 நாட்கள் கடந்துள்ள போதிலும் உரிய முறையில் உரம் கிடைக்கவில்லை இதற்கு காரணம் உரங்களை  பதுக்கி வைப்பதே ஆகும் என அப்பகுதி விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய செயல்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் எதிராக அமைச்சு கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here