அநுராதபுரம் மாவட்டத்தின் கலென்பிந்துனுவெவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விவசாயிகள், சுமார் 1,000 ஏக்கர் நிலப்பரப்பில், பெரிய வெங்காயம் பயிர் செய்கைகளை மேற்கொண்டிருந்த போதிலும், அவற்றின் அறுவடைக்கு உரிய விலை கிடைக்காததால் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 156, 160 மற்றும் 170 ரூபாவாக காணப்படுவது மிகவும் வருத்தமளிக்கும் நிலை என விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் மேலும் தெரிவிக்கையில் ,

விவசாயிகள் பயிரிட்டுள்ள பெரிய வெங்காயங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் தமக்கு இலாபம் கிடைப்பதில்லை எனவும் இதனால் பயிர்ச்செய்கைக்காக பெற்ற கடனை கூட செலுத்த முடியாதுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வெளிநாட்டில் இருந்து  பெரிய வெங்காயங்களை இறக்குமதி செய்வதால், உள்ளூர் பெரிய வெங்காயங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கின்றன ர்.

உள்நாட்டு விவசாயிகள் பயிரிட்டுள்ள பெரிய வெங்காயங்களை ஒரு கிலோ 275 முதல் 300 ரூபா வரை விற்பனை செய்ய அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here