உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டைக் கொண்ட நாடாக சிங்கப்பூர் (Singapore) மீண்டும் பெயரிடப்பட்டுள்ளது.

ஹென்லி கடவுச்சீட்டு இன்டெக்ஸ் (Henley Passport Index) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சிங்கப்பூர் குடிமக்கள் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

இந்தப் பட்டியலில் இலங்கை 91ஆவது இடத்தில் உள்ளதுடன், இந்தியா 80ஆவது இடத்தில் உள்ளது.

அத்துடன் குறித்த பட்டியலில் ஜப்பான் மற்றும் தென் கொரியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட ஏழு நாடுகள் அந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here