குருணாகல், கிரியுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எலகம்மில்லவ பிரதேசத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (22.11.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக கிரியுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரியுல்ல பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் குருணாகல், மீவெல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடையவர் ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கிரியுல்ல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here