உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சட்டத்திருத்தங்களை அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

உள்ளராட்சிமன்றத் தேர்தலை கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்த வேட்புமனுக்கள் கோரப்பட்டிருந்த போதிலும் கடந்த அரசாங்கம் தேர்தலை நடத்த உரிய நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டிருக்காமையால் தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியிருந்தது.

என்றாலும், கடந்த ஆகஸ்ட் மாதம் உயர் நீதிமன்றம் உள்ளூராட்சித் தேர்தலை விரைவாக நடத்துமாறு உத்தரவிட்டது. அதன் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் தேர்தலை நடத்த உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியிருந்தது.

என்றாலும், புதிய அரசாங்கம் அமைந்து குறுகிய காலமே ஆகியுள்ளதாலும் 2025ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மார்ச் மாதமே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்பதாலும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புதிய வேட்புமனுக்களின் கீழ் தேர்தலை நடத்தவும் கட்சித் தலைவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர். இதனால் எதிர்வரும் ஏப்ரல் மாதம் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதுடன், அதற்கான சட்டத்திருத்தங்களை அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நிறைவேற்றம் உத்தேசித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here