உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதியிலிருந்து இன்று வரை 456 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 4 முறைப்பாடுகளும், சட்டத்தினை மீறியமை தொடர்பில் 423 முறைப்பாடுகளும் வேறு குற்றங்கள் தொடர்பில் 29 முறைப்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 43 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வன்முறை சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடொன்றும், ஏனைய சம்பவங்கள் தொடர்பில் ஒரு முறைப்பாடும், சட்டத்தினை மீறியமை தொடர்பில் 41 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ள 456 முறைப்பாடுகளில் 422 முறைப்பாடுகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாகவும் 34 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.








