அமைச்சர்கள், ஊடக செயலாளர்கள் மற்றும் அரச நிறுவன அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஊடக அடையாள அட்டைகளை இடைநிறுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆங்கில ஊடகங்களில் வெளியான செய்திகளின் படி,
இந்த ஆண்டு வழங்கப்பட்ட மொத்த அட்டைகளின் எண்ணிக்கை 4,800 ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு (2024) வழங்கப்பட்ட 8,100 அட்டைகளுடன் ஒப்பிடும் போது, அரைவாசி ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார தெரிவித்ததாவது,
கடந்த காலங்களில் அட்டைகள் அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளன.
சில ஊடக நிறுவனங்கள் கட்டுப்பாடுகளின்றி விண்ணப்பித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த ஆண்டில் விண்ணப்பங்கள் குறைந்த நிலையில் உள்ளதால், புதிய அட்டைகள் வழங்கப்படவில்லை.
இந்த நடவடிக்கை ஊடக அடக்குமுறை அல்ல என்றும் ஹர்ஷ பண்டார, வலியுறுத்தியுள்ளார்.








