நாடளாவிய ரீதியில் பல மாகாணங்களில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை இன்று வெள்ளிக்கிழமை (18/04/2025) எச்சரிக்கை மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வட மத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கும்  இந்த எச்சரிக்கை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருத்தல்  மற்றும் வெளிப்புற செயற்பாடுகளில்  ஈடுபடுத்தல் போன்றவற்றை தவிர்த்துக் கொள்ளுமாறு  பொதுமக்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்பம் தொடர்பான நோய்களிலிருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள அதிகளவு  நீர் அருந்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here