நாடு எதிர்கொள்ளும் வங்குரோத்து நிலையிலிருந்து மீள வேண்டுமெனில் இனம், மதம், வர்க்கம், கட்சி பேதமின்றி அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமது நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அன்பு, அமைதி மற்றும் சகோதரத்துவத்தை மையப்படுத்திய நத்தார் பண்டிகை கிறிஸ்தவர்களின் பண்டிகையாக மட்டுமன்றி, உலகெங்கிலும் வாழும் அனைவரும் பாகுபாடின்றி கொண்டாடப்படும் கலாச்சார விழாவாகவும் உள்ளது.

இதன் அர்த்தத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு நாமும் ஒரு நாடாக முன்னேற வேண்டிய நேரம் வந்துள்ளது.

இது நாட்டினதும் மக்களினதும் முன்னேற்றத்திற்குக் காரணமாக அமையும் என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

அடுத்த நத்தார் தினத்தைக் கொண்டாடும் வேளையில் ஒவ்வொரு வீட்டிலும் எதிர்பார்ப்பு விளக்குகளுக்குப் பதிலாக முன்னேற்றத்தின் விளக்குகள் ஒளிரும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமது நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here