எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தபடவுள்ளது என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன் இடம்பெற்ற சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சுகாதாரத்துறை அமைச்சர் சினேகபூர்வ அடிப்படையில் எனது காரியாலத்திற்கு வருகை தந்திருந்தார். இதன் பொழுது வடக்கின் சுகாதார நிலைகள் குறித்தும் கலந்துரையாடபட்டது.அத்துடன் புற்றுநோய் சிகிச்சை நிலையமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை காணப்படும் நிலையில் அதன் விருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மற்றும் 1300 வைத்தியர்கள் மற்றும் 500 தாதியர்கள் நாட்டினை விட்டு வெளியேறியுள்ள நிலையில் 15 வைத்தியர்கள் மீள திரும்பியுள்ளதாகவும், பொருளாதார நெருக்கடி குறைகின்ற பொழுது மீள நாட்டிற்கு திரும்புவார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.
இதன்பொழுது எமது கட்சி பிரதான வேட்பாளர்களுடன் எமது அதிகாரப்பகிர்வு உட்பட உரிமை சார்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி எமது மத்திய குழு முடிவெடுக்கும்.இதேவேளை எமது மத்தியில் தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் நிலவுகின்ற கருத்துக்களையும் அவருக்கு தெளிவுபடுத்தினேன். இதற்கு யாழ்பாண மக்கள் தமது வாக்குகளை வழங்குவது அவர்களுடைய உரிமை தொடர்பானது என அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.







