முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட இருவர், பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக இலங்கை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், பிரதம பொலிஸ் பரிசோதகர் இந்திக்க சில்வா மற்றும் DIG பாலித்த சிறிவர்தன ஆகியோர் அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ப செயற்பட்டதன் மூலம் இவ்விருவரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.








