நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை எதிர்பாராத விதமாக அதிகரித்துள்ளது.

இதன்படி 2025ம் ஆண்டின்  முதல் 5 மாதங்களில் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்துள்ளது.

மே மாதத்தில் மாத்திரம் 1 இலட்சத்து 9 ஆயிரத்து 213 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஜனவரி முதல் மே 25ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் 10 இலட்சத்து 6 ஆயிரத்து 97 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் அரைப்பகுதியில் எதிர்பார்த்ததை விட அதிக சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தினால் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்த்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறையின் முன்னேற்றமே இதற்கு காரணம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here