ஏற்றுமதித் தொழில்துறையின் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இன்று (28) முற்பகல் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சினால் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும், ஏற்றுமதி துறையின் சவால்களை வெற்றிகொள்வதற்கு நீண்டகால கைத்தொழில் அபிவிருத்தித் திட்டத்தை தயாரிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இக் கலந்துரையாடலில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபோன்சு ஆகியோர் உட்பட அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.








