மினுவாங்கொடை பகுதியில் ஏழரைக் கோடி ரூபாவுடன் கைதுசெய்யப்பட்ட பிரதான இரண்டு சந்தேகநபர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய ஒருவர் கொள்ளையின் எஞ்சிய பணத்துடன் துபாய்க்குத் தப்பிச் சென்றுள்ளார்.
மினுவாங்கொடை பகுதியில் 40 இலட்சம் ரூபாவுடன் தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேக நபர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மினுவாங்கொடை பகுதியில் வைத்து, கம்பஹா காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
குறித்த இருவரும் எம்பிலிபிட்டிய – செவனகல பகுதியில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர்கள் கம்பஹா பகுதிக்குத் தப்பிச்சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
இதனையடுத்து, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய அவர்கள் மினுவங்கொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 37 மற்றும் 40 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








