கல்கிசை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 10 கிராம் 700 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
களுத்துறை வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








