ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் 7 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

ராவல்பிண்டியில் நடைபெறும் இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இதனிடையே, இதுவரையில் நடந்துமுடிந்த போட்டிகளின் புள்ளிகளுக்கமைய ஏ குழுவில் நியூசிலாந்து அணி, விளையாடிய 2 போட்டிகளும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

இதுவரை முதல் இடத்தில் காணப்பட்ட இந்திய அணி, நியூசிலாந்து அணியின் நேற்றைய வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் காணப்படுகிறது.

அதேநேரம் பி குழுவின் நான்கு அணிகளும் இதுவரையில் தலா ஒவ்வொரு போட்டியில் விளையாடியுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here