இன்று சமூகத்தில் உள்ள அனைவரும் அச்சத்திலும் சந்தேகத்திற்கு மத்தியிலும் வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் அமைச்சு சார் ஆலோசனைக் குழு கூட்டத்தில் நாட்டில் நடந்து வரும் வன்முறை கலாசாரம் குறித்து ஆராயப்பட்டது. இந்த வன்முறை சார் அலையை தடுக்க முறையான திட்டமொன்று முன்னெடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

எனவே, இந்த குற்ற அலையை கட்டுப்படுத்த பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படாது என்றும், மாறாக குற்றவியல் நடவடிக்கை முறை சட்டம் மேலும் பலப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த கொலைக் கலாச்சார போக்கு நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்குப் பிரச்சினையாக காணப்படுகின்றது. எனவே குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்தி இந்த குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி எடுக்கும் நடவடிக்கைகள் என்ன? என எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று (25/02/2025) சபையில் கேள்வி எழுப்பினார்.

சுற்றுலாத்துறை முன்னேற்றம் கண்டு வரும் இந்நேரத்தில், சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு இது ஒரு பெரும் பிரச்சினையாக அமைந்து காணப்படுகின்றது. இது பொருளாதாரத்தையும் பாதிப்பதாக அமையும், எனவே இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here