பிவ் (Pew)ஆராய்ச்சி மையம் நடத்திய சமீபத்திய “உலகளாவிய கருத்துக் கணிப்புக்கு அமைய, ஆய்வு செய்யப்பட்ட 37 நாடுகளில் ஐக்கிய நாடுகள் சபை குறித்த பொதுமக்களின் பார்வை மேம்பட்ட ஒரே நாடு இலங்கை ஆகும்.
தற்போது மூன்றில் இரண்டு பங்கு இலங்கையர்கள், அதாவது 66% பேர் ஐ.நா குறித்து சாதகமான கருத்தை கொண்டுள்ளனர். என்றும் குறித்த ஆய்வு மையம் கடைசியாக 2024-ல் இந்த நாட்டை ஆய்வு செய்தபோது இது 58% ஆக இருந்தது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஆய்வு செய்யப்பட்ட நாடுகள் முழுவதும் ஐ.நா குறித்த பார்வை குறைந்து வரும் அல்லது பெரிதாக மாறாத பொதுவான போக்கிற்கு மத்தியில், இந்த 8 சதவீத புள்ளி அதிகரிப்பு தனித்து தெரிவதாக கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பிவ் நிறுவனம் கூறுகையில், கடைசியாக இந்த கேள்வியை கேட்டதில் இருந்து 10 நாடுகளில் ஐ.நா மீதான சாதகமான பார்வை கணிசமாக குறைந்துள்ளது.
நைஜீரியா மிகப்பெரிய சரிவை பதிவு செய்துள்ளது. அங்கு 2025-ல் 80% ஆக இருந்தது 2026-ல் 63% ஆக குறைந்துள்ளது. அதேபோல் பிலிப்பைன்ஸில் 2024 உடன் ஒப்பிடுகையில் சாதகமான கருத்து 16 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளது.
ஆய்வு செய்யப்பட்ட 37 நாடுகள் அனைத்திலும் சராசரியாக 55% பெரியவர்கள் ஐ.நா குறித்து சாதகமான கருத்தையும், 37% பேர் பாதகமான கருத்தையும் வெளிப்படுத்தினர்.
இலங்கையில் குறிப்பிடத்தக்க தலைமுறை இடைவெளியையும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. முதியவர்களை விட இளம் இலங்கையர்கள் ஐ.நாவை சாதகமாக பார்க்க அதிக வாய்ப்புள்ளது. அளவிடப்பட்ட இளைய மற்றும் மூத்த வயதினரிடையே 18 சதவீத புள்ளிகள் வித்தியாசம் உள்ளது.
இதேபோன்ற வயது வித்தியாசங்கள் பல நாடுகளிலும் பதிவாகியுள்ளன. இளம் வயதினர் பொதுவாக ஐ.நா மீது அதிக நேர்மறையான பார்வையை கொண்டிருப்பதாக Pew குறிப்பிட்டுள்ளது.
உலகளவில் கருத்துகள் பெரிதும் வேறுபடுகின்றன. ஆய்வு செய்யப்பட்ட பெரும்பாலான ஆசிய-பசிபிக் நாடுகளில் ஐ.நா பாதகமானதை விட சாதகமாகவே பார்கப்படுகிறது. அதே நேரத்தில் இஸ்ரேல் மிகவும் எதிர்மறையான மதிப்பீட்டை பதிவு செய்துள்ளது. அங்கு 79% பேர் பாதகமான கருத்தை தெரிவித்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








