ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் 66வது போட்டி டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது.

ஜெய்ப்பூரில் இன்றிரவு உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் பஞ்சாப் கிங்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்விகளுடன் 17 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

டெல்லி கெப்பிடல்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 6 தோல்விகளுடன் 13 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஒவ் சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.

இருந்தபோதிலும் தன்னுடைய புள்ளிபட்டியலில் 2-வது இடத்திலிருந்து முன்னேற பஞ்சாப் கிங்ஸ் அணி – டெல்லி கெப்பிடல்ஸ் அணிக்கு சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5ம் இடத்தில் உள்ள டெல்லி கெப்பிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேறுவதற்காக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக முழுமையான முயற்சியை எடுப்பார்கள் என நம்பப்படுகிறது.

பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில் துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் அதிரடிகாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்துவது என்பது டெல்லி கெப்பிடல்ஸ் அணிக்கு போராட்டமாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here