நாட்டில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிப்பதற்காக, வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து சில குழுக்கள் செயல்பட்டு வருவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
சில அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களும் இச்செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நேற்று (14) நடைபெற்ற, ருஹுணு பல்கலைக்கழக துணைவேந்தர் தர்ம கீர்த்தி ஸ்ரீ கலாநிதி அகுரெட்டியே நந்த நாயக்க தேரருக்கு மியன்மார் அரசாங்கம் வழங்கிய ‘அக்கமஹா பண்டிதர்’ கௌரவப் பட்ட விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசியலமைப்புத் திருத்தத்தில் மனித உரிமைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.








