இலங்கை விமானப்படையின் 20வது தளபதியாக எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க இன்று உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஓய்வு பெற்றதையடுத்து, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க திங்கட்கிழமை எயார் வைஸ் மார்ஷல் எதிரிசிங்கவை அப்பதவிக்கு நியமித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி, ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி என்ற வகையில், எயார் மார்ஷல் ராஜபக்ஷவை எயார் சீப் மார்ஷல் தரத்திற்கு செவ்வாய்க்கிழமை (28/1/2025) பதவி உயர்வு அளித்தார்.

எயார் சீஃப் மார்ஷல் ராஜபக்ஷ இலங்கை விமானப்படையின் 19வது தளபதியாக 2023 ஜூன் 29 அன்று பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here