தற்பொழுது பெய்து வரும் கடும் மழை காரணமாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் உள்ள தாழ் நிலப்பகுதியில்  இருப்பவர்கள் சிலர் தமக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நாளாந்த செயற்பாட்டை முன்னெடுக்க முடியாத நிலையில் வெள்ளம் வீட்டை சூழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பெய்த கடும் மழை காரணமாக மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்நுழைந்த முதலை ஒன்று சில கோழிகளை தின்றுள்ளது. அத்தோடு முதலையின் அச்சம் காரணமாக  வீட்டுக்குள் உள்நுழையாதவாறு வேலியில் கட்டப்பட்டிருந்த வலையில் முதலை சிக்குண்ட நிலையில்  காணப்படுகின்றது.

குறித்த பகுதியில் உள்ள கழிவு வாய்க்கால் முறையாக சீர் செய்யாத காரணத்தினாலே இப்பகுதியில் தொடர்ச்சியாக முதலைகள் அச்சுறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த பகுதியில் உள்ள கழிவு வாய்க்கால்களை சீர் செய்து தருமாறு வேண்டி நிற்கின்றனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here