ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை விரைவில் சந்திப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலை கழகம், ஜனநாயக போராளிகள் கட்சி என்பனவற்றின் பிரதிநிதிகள் நேற்றையதினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்திருந்தனர்.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட டெலொ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன்,சஜித் பிரேமதாசவை சந்தித்துப் பல விடயங்கள் குறித்துக் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here