மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் அரசுக்கும், தீவிரவாத அமைப்பினருக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது. எதிரிப்படைகளை பழி வாங்குவதற்காக, வெவ்வேறு இடங்களில் கண்ணி வெடிகள் பதிக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு பதிக்கப்பட்டு இருந்த கண்ணி வெடியில் சிக்கிய கனரக வாகனம் நேற்று (28/04/2025) வெடித்து சிதறிய விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதோடு  3 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

இதேவேளை காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். நைஜீரியாவில் இது போன்ற விபத்து சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here