அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் உடனடியாக நிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் வரிகள் தொடர்பில் எதிர்மறையாகக் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் விளம்பரம் ஒன்று வெளியாகியதைத் தொடர்ந்து, ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் இதுகுறித்து பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டதாவது:
“மோசமான நடத்தையின் காரணமாக, கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் உடனடியாக நிறுத்தப்படுகின்றன,” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளிலும், எதிர்கால பொருளாதார பேச்சுவார்த்தைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக சர்வதேச அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.








