கம்பஹா அகரவிட்ட பிரதேசத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவருக்கும் அநாமதேய தொலைபேசி அழைப்புகள் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
உந்துருளியில் பிரவேசித்த இரண்டு பேர் கம்பஹா அகரவிட்ட பகுதியில் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பி சென்றனர்.
உந்துருளி உதிரிபாகங்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தை சேர்ந்த இருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இருவர் கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவத்தில் கடுகஸ்தர மற்றும் யக்கல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவர் காயமடைந்தனர்.







