கறுவா ஏற்றுமதி சந்தையை விரிவுபடுத்துவதற்காக நடவடிக்கை எடுப்பதற்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, கறுவா ஏற்றுமதியிலிருந்து கிடைக்கும் வருவாயை விரிவுபடுத்துவது இந்த ஆண்டு முன்னுரிமை அளிக்கப்படும் என அந்த அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இலங்கை கறுவாவுக்கான முக்கிய சந்தையாகப் பாரம்பரியமாகத் தென் அமெரிக்கா இருந்து வந்துள்ளது.

எனவே, இம்முறை ஏற்றுமதி வருவாயில் அதிகரிப்பை அடைய, அமைச்சு புதிய பாரம்பரியமற்ற சந்தைகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு பாரம்பரிய சந்தைகளுக்கு அப்பால் சென்று சீனா மற்றும் ஐரோப்பா போன்ற பாரம்பரியமற்ற சந்தைகளில் கவனம் செலுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here