கல்பிட்டி மற்றும் சின்னகுடியிருப்பு வாவியில் இருந்து கடந்த 21 ஆம் திகதி மாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரு நபர்கள் இதுவரை திரும்பி வரவில்லை.
இதுகுறித்து நேற்று (22) கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறையீடு செய்யப்பட்டது.
காணாமல் போனவர்கள் 27 மற்றும் 34 வயதுடைய இரண்டு மீனவர்கள் ஆகும்.
இந்நிலையில், காணாமல் போன மீனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் கல்பிட்டி பொலிஸ் மற்றும் கடற்படை அதிகாரிகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர் என சார் தெரிவித்துள்ளனர்.






