கல்வியியற் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றுவதுடன் அதன்மூலம் கல்வியியற் கல்லூரிகளில் இணையும் 5,000 மாணவர்களின் எண்ணிக்கையை 7,500 ஆக அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டிலுள்ள 19 கல்வியியற் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








