கடந்த வருட பெரும்போகத்தில் 4471 ஏக்கர் நெல் பயிரிடப்பட்டது.

சிவில் பாதுகாப்பு திணைக்களப் படைகளுக்கு சொந்தமான களஞ்சியசாலைகளில் 16 இலட்சம் கிலோகிராம் நெல் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

சுமார் 305 ஏக்கர் நிலப்பரப்பில் சோளம் பயிரிடப்பட்டுள்ளதாகவும், அந்த பயிர்களின் அறுவடை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் தென்னையை பொருளாதார பயிராகவும், பழங்கள் மற்றும் மரக்கறிகளை இடைபயிர்களாகவும், குரக்கன், எள் போன்ற தானியங்களை சந்தைக்கு அனுப்புவதன் மூலம் உணவு பாதுகாப்பை உருவாக்க சிவில் பாதுகாப்பு திணைக்களம் தனது அதிகபட்ச பங்களிப்பை வழங்கும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here