களனி பல்கலைக்கழகத்தின் களனி பல்கலைக்கழகத்தின் CWW கன்னங்கரா விடுதியின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து ஆண் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று (23.10) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here