இன்று (05) காலை, களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில், போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் ஒரு பொதி கரை ஒதுங்கி கிடந்தது.
சுமார் 10 கிலோகிராம் எடையுடைய அந்தப் பொதியை, அருகிலிருந்த சுற்றுலா ஹோட்டல் ஊழியர்கள் கண்டுபிடித்து பாதுகாப்புப் பிரிவினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று பொதியை கைப்பற்றி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பொதி கடலில் மிதந்து வந்ததா அல்லது யாரேனும் கொண்டு வந்து போட்டதா என்பது தொடர்பில், களுத்துறை விசேட அதிரடிப் படையினரும் தெற்குப் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








