நியூயோர்க் நகரின் வரலாற்றில் முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் நியூயோர்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் மேயர் என்பதோடு, மிக இளம் வயதிலேயே பதவி ஏற்ற தலைவர்களில் ஒருவராகவும் உள்ளார்.
உகாண்டாவில் பிறந்த ஸோஹ்ரான் மாம்டானியின் தந்தை குஜராத்தைச் சேர்ந்த முஸ்லிம், தாய் ஒடிசாவைச் சேர்ந்த இந்து ஆவர்.
ஜனநாயக சோசலிஸ்ட் வேட்பாளர் என போட்டியிட்ட அவர், முன்னாள் ஆளுநர் எண்ட்ரூ கியூமோ (சுயேச்சை) மற்றும் கர்ட்டிஸ் ஸ்லிவா (குடியரசுக் கட்சி) ஆகியோரை தோற்கடித்து வரலாற்று வெற்றியை பெற்றுள்ளார்.
மாம்டானியின் தேர்தல் பிரச்சாரம் வாழ்க்கைச் செலவு, வீட்டு மலிவுத்திறன் போன்ற மக்களின் அன்றாட பிரச்சினைகளை மையமாகக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.







