பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய “கல்மேகி” என்ற சூறாவளியால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் 58 பேர் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கி 300க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன மற்றும் பல வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
சூறாவளி தாக்கத்தால் 180க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், மீட்பு பணிக்காக சென்ற ஒரு வானூர்தி மோசமான வானிலையால் விபத்துக்குள்ளாகி நொறுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது, இந்த சூறாவளி நாளை இரவு வியட்நாமின் மத்தியப் பகுதிகளைத் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வியட்நாம் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.








