கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் கிராம அலுவலர் பிரிவின் கீழுள்ள சம்பு குளம் மற்றும் நாவல் நகர் பகுதியில் தொடர்ச்சியாக இரவு வேளைகளில் மக்கள் குடியிருப்புகளில் யானைகள் வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் குடியிருப்புகளில் இருக்கும் வாழ்வாதாரங்களை தொடர்ச்சியாக அழிவுக்கு ஏற்படுத்தி வருவதாகவும் இதன் காரணமாக தனிமையில் இருப்பவர்கள் மற்றும் முதியவர்கள் தமது வீடுகளில் விட்டு இரவு வேளைகளில் அயல் வீடுகளில் தஞ்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது எனகவலை தெரிவித்துள்ளனர் .
மேலும் தெரிவிக்கையில்,
அன்றைய தினம் 23.07.2024இரவு மக்கள் குடியிருப்புகளில் புகுந்த காட்டு யானை 20இருபதுக்கும் மேற்பட்ட தென்னை மற்றும் 40-க்கும் மேற்பட்ட வாழைகளை முற்று முழுதாக அளித்து பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது.
இப்பகுதிகளில் தொடர்ச்சியாக மக்கள் வாழ்வாதாரம் இதனால் பாதிப்படைகிறது என தெரிவிக்கப்படுகிறது.
இப்பகுதியில் வாழும் மக்கள் தொடர்ச்சியாக காட்டு யானைகளால் பாதிக்கப்படுவதாகவும் தமது பகுதிக்கு நிரந்தரமான ஒரு யானை வேலியை அமைத்துத் தந்து எமது மக்களின் உயிர்களை காப்பாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும் என இப்பகுதியில் வாழும் மக்கள் தெரிவித்துள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.








