இலங்கையின் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம், தீவு முழுவதும் உள்ள பன்றிப் பண்ணைகளின் உரிமையாளர்கள் தங்கள் பண்ணைகளைப் பதிவு செய்வதற்கு அருகிலுள்ள கால்நடை அலுவலகத்திற்குச் செல்லுமாறு கோரியுள்ளது.

நாட்டிலுள்ள சில பன்றிப் பண்ணைகளில் உள்ள பன்றிகள் முதல் முறையாக ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளன என்ற செய்தியைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணம், ஊவா, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மேல்மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் கே.கே.சரத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here