காஸாவில் நான்காவது சுற்று கைதிகள் பரிமாற்றத்தின் கீழ் இஸ்ரேலிய சிறைச்சாலைகளிலிருந்து 183 கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக பலஸ்தீன கைதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
காஸாவில் இன்று நான்காவது கைதிகள் பரிமாற்றம் செய்யப்படவுள்ளதோடு மூன்று இஸ்ரேலியர்களை இன்று விடுவிக்கவுள்ளதாக ஹமாஸ் அமைப்பு அடையாளம் கண்டுள்ளது.
வெளிநாட்டில் மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் 50 பலஸ்தீனர்கள் எகிப்துடன் மீண்டும் திறக்கப்பட்ட ரஃபா வழியாக காசாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேற்குகரைப் பகுதியில் இஸ்ரேலிய படைகள் இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து முன்னெடுப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜெனின், துல்கரேம் அகதி முகாம்கள் உள்ளிட்ட பிற பலஸ்தீன சமூகத்தினரையும் குறி வைத்துக் கடந்த வாரத்தில் இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் இருபதுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.








