‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ எனும் புதிய கூட்டமைப்பு ஊடாக பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மற்றும் முள்ளாள் இராஜாங்க இமைச்சர் வியாழேந்திரன் தலைமையிலான தமிழர் முற்போக்கு கழகம் இனைந்து உருவாக்கிய  கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 11 உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்பு மனு இன்று வியாழக்கிழமை (3/20/2025) தாக்கல் செய்தனர்.

நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவை தொடர்ந்து உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்குவதற்காக புதிய முயற்சியொன்றை பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினரும் இடையிலான உத்தியோகபூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று சைச்சாத்திடப்பட்டுள்ளது.

கிழக்கில் பலமிக்க அரசியல் சக்தி ஒன்றினை கட்டமைக்கும் முயற்சியில் ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ எனும் புதிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

[மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here