குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் தான் குற்றவாளி அல்ல என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அவருக்கு எதிரான 07 குற்றப்பத்திரிகைகளை இன்று (ஆகஸ்ட் 01) காலை நீதிமன்றத்தில் வாசித்த பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








